அசூயை இல்லா மனம் வேண்டும்
ஆசை இல்லா மனம் வேண்டும்
இகழ் சொல்லா நாக்கு வேண்டும்
நன்றி மறவா இதயம் வேண்டும்
மற்றவர் குறை பொறுக்கும் குணம் வேண்டும்
பகைவருக்கும் அருளும் பண்பு வேண்டும்
சிறுமையை மன்னிக்கும் நெறி வேண்டும்
தற்பெருமை கூறா தன்னடக்கம் வேண்டும்
தாய் மொழி, தாய் நாடு மீது பெருமை வேண்டும்
கடந்த காலம் கற்று கொடுத்த பாடம் மறவா புத்தி வேண்டும்
நிழல் காலம் கடக்க தைரியம் வேண்டும்
எதிர் காலம் மீது நம்பிக்கை வேண்டும்
மற்றவர் மனம் புண்படாமல் நடக்கும் நாசூக்கு வேண்டும்
பிறர் துன்பம் அறியும் சூட்சமம் வேண்டும்
உண்மை உறைக்கும் நேர்மை வேண்டும்
தவறே எண்ணாத தயாளம் வேண்டும்
பொருள் மீது பற்றில்லா மனம் வேண்டும்
ஆடம்பரம் கண்டு மிரளா அடக்கம் வேண்டும்
தப்பிற்கு பணியா தைரியம் வேண்டும்
பாசம் பந்தத்திற்கு பணியும் பணிவு வேண்டும்
கடும் சொல் சொல்லா நாகரிகம் வேண்டும்
சமாதானம் விரும்பும் மனம் வேண்டும்
மறக்கவும் மன்னிக்கவும் கற்றல் வேண்டும்
தோல்வி தாங்கும் திடம் வேண்டும்
வெற்றி தரும் அகந்தை ஏற்கா அடக்கம் வேண்டும்
என் செய்கை ஏற்படுத்தும் பாதிப்பு அறியும் ப்ரகநை வேண்டும்
இம் மாவுளகில் யாம் ஒரு சிறு துளி என்ற எண்ணம் வேண்டும்
இவற்றுகும் மேலாக குழந்தையை போல் குணம் வேண்டும்
இவை எல்லாம் பேராசை என்றால் கடவுளே மன்னிப்பாயாக